நடப்பு ஆண்டுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து. இதன் மூலம் லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில் இந்த ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் அவர் அணிந்திருந்த ‘தகதகவென’ மின்னும் வகையிலான அந்த கவுனை வடிவமைத்தது சாயிஷா ஷிண்டே என்ற திருநங்கை என தெரியவந்துள்ளது. ஆடை வடிவமைப்பாளரான சாயிஷா வடிவமைத்த ஆடையை அணிந்திருந்த ஹர்னாஸ், அழகு பதுமை போலவே காட்சி அளித்தார் என்பதை மறுக்க முடியாது. ஹர்னாஸின் உடலை அணைத்தபடி இருந்த அந்த ஆடை ‘V’ நெக் (கழுத்து) வடிவில் அசத்தலாக இருந்தது. அதோடு அந்த கவுன் மிக நீளமாக இருக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் சாயிஷா. அந்த கவுனுடன் கல் வைத்த தொங்கும் வகையிலான கம்மல், பார்ப்பதற்கு ஈரப்பசையுடன் இருக்கும் வகையிலான Dewy பேஸ் மேக்-அப், அதில் அவரது கன்னங்களுக்கு மட்டுமே பிங்க் நிறத்தில் பிளஷ் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் நியூட் லிப்ஸ்டிக் ஷேட் மற்றும் கண்களுக்கு போல்டான் மேக்-அப் செய்து இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். சாயிஷா, பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், ஷ்ரத்தா கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு ஸ்டைலிஸ்டாக உள்ளார். பேஷன் என்ற படத்தில் காஸ்ட்யூம் டிசைனராககவும் பணியாற்றி உள்ளார்.
http://dlvr.it/SFHbJf
Monday, 13 December 2021
Home »
» ‘மிஸ் யூனிவர்ஸ்’ ஹர்னாஸ் சாந்து அணிந்திருந்த ஆடையை வடிவமைத்த திருநங்கை