மலையாள சினிமாவின் பிரபல இயக்குநராக இருப்பவர் அலி அக்பர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றிவந்தவர், சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய அலி அக்பர், "எனது ஜென்மத்தில் எனக்கு கிடைத்த சட்டையை நான் இன்று கழற்றி எறிகிறேன். அது இந்தியாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சிரிக்கும் இமோஜிகள் பதிவிட்ட மோசமானவர்களுக்கான எனது பதில் இது. இன்றுமுதல் நானும், எனது குடும்பமும் முஸ்லீம் இல்லை. நாங்கள் தீர்மானித்துவிட்டோம். அந்த மதத்தை இன்றுமுதல் நாங்கள் விட்டுவிட்டோம். இமோஜி பதிவிட்டதற்கு அமைதிகாத்த முஸ்லிம்களின் மதத்தை நான் விட்டுவிட்டேன்" என ஆவேசமாக பேசியிருந்தார்.வீடியோவில் ஆவேசமாக பேசும் அலி அக்பர்
முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சம்பவம் குறித்து அலி அக்பரின் பதிவுக்கு கீழே சிரிக்கும் இமோஜ்களை பலர் பதிவிட்டதால் அவர் மதம் மாறுவதாக ஃபேஸ்புக் லைவில் அறிவித்திருந்தார். அலி அக்பரின் செயல் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே அலி அக்பர் இந்து மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ராம் சிங்கம் என மாற்றிக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து மீடியாக்களிடம் பேசிய அலி அக்பர், "தண்ணீரில் முழுவதும் விஷம் கலந்துவிட்டதால் சுவாசிக்க முடியாத அவஸ்தையில்தான் மதம் மாறும் முடிவை எடுத்தேன். இனி அதில் இருப்பதில் அர்த்தம் இல்லை என உணர்ந்துகொண்டேன். இதில் சமூக சீர்திருத்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த நிலையில்தான் நானும் என் மனைவியும் மதம்மாற முடிவு செய்தோம்.மலையாள சினிமா இயக்குநர் அலி அக்பர்
இன்னும் புதிய பெயரை நாங்கள் முடிவு செய்யவில்லை. இப்போது நானும் மனைவியும் மட்டும்தான் மதம் மாறியுள்ளோம். எங்கள் பிள்ளைகள் வளந்தபிறகு, அவர்கள் சுயமாக முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டோம். நாங்கள் மதம் மாறியதில் எந்த அரசியலும் இல்லை. முஸ்லிமாக இருந்தால் எந்த சலுகையும் பா.ஜ.க-வில் இருந்து கிடைக்காது என நான் மதம் மாறியதாக கூறுவது தவறானது. அப்படியானால் நான் முஸ்லிம் லீக்-க்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்" எனக்கூறினார் அலி அக்பர்.
http://dlvr.it/SFB1DJ
Saturday, 11 December 2021
Home »
» `நானும், எனது மனைவியும் மதம் மாறுகிறோம்!' - இயக்குநர் அலி அக்பர் முடிவுக்கு என்ன காரணம்?