2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அந்த ஐந்து மாநிலங்களில், உ.பி தேர்தல் களம்தான் ஹைலைட். இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என்று நான்கு கட்சிகள் மோதிக் கொள்கின்றன. சமீபகாலமாக, மேடைப் பிரசாரத்தில் சமாஜ்வாடியும், பா.ஜ.க-வும் மாறி மாறி மோதிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், சட்டமன்றத்திலேயே சமாஜ்வாடியை சரமாரியாகத் தாக்கி பேசியிருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.யோகி ஆதித்யநாத்
Also Read: மோடியுடன் யோகி: `புதிய இந்தியா' கவிதை! - வைரல் புகைப்படங்களின் பின்னணி?
தற்போதைய உ.பி அரசின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. அதில், நேற்று (டிச.16), இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது யோகி அரசு. இதைத் தொடர்ந்து பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ``சோஷியலிஸம் என்பது மிகப் பெரிய மாயை. இந்தியாவுக்குத் தேவை சோஷியலிஸமோ, கம்யூனிஸமோ அல்ல; ராம ராஜ்ஜியம்தான்! உ.பி-க்கும் ராம ராஜ்ஜியம்தான் தேவை. ராம ராஜ்ஜியம் என்பது நிரந்தரமானது, சூழ்நிலைகளுக்காக மாறாதது. மொத்த பிரபஞ்சத்துக்குமானது'' என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், ``சோஷியலிஸத்தின் உண்மையான மதிப்புகளை உணர்ந்த பிரதமர் மோடி, மக்களுக்குக் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். சமாஜ்வாடி செய்த குடும்ப அரசியல், ஊழல் காரணமாக உ.பி வளர்ச்சியடைவேயில்லை. இல்லையென்றால் உ.பிதான் பொருளாதாரத்தில், இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக இருந்திருக்கும்'' என்று கூறினார். சமாஜ்வாடி எம்.எல்.ஏ-வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராம் கோவிந்த் செளத்ரியை கைகாட்டி, ``அவர் சோஷியலிஸ்டாக இருந்தவர். ஆனால், இப்போது குடும்ப அரசியல் செய்யும் நிறுவனத்தில் இருந்துவருகிறார்'' என்று கூறியதோடு, பா.ஜ.க-வில் இணைந்துகொள்ளுமாறு ராம் கோவிந்துக்கு அழைப்பும் விடுத்தார் யோகி.ராம் கோவிந்த் செளத்ரி
Also Read: Fact Check: `உ.பி பந்தேல்கண்ட் பகுதியில் புதிய அணை' - பாஜக தலைவர்கள் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?!
இது குறித்து ராம் கோவிந்த் செளத்ரி, ``பா.ஜ.க, பொய் சொல்வதில் தேர்ந்த கட்சி. நான் என் வாழ்நாள் முழுவதும் அகிலேஷ் யாதவோடு சமாஜ்வாடி கட்சியிலேயே இருப்பேன்'' என்று கூறியிருக்கிறார்.
http://dlvr.it/SFYgkF
Friday, 17 December 2021
Home »
» `இந்தியாவுக்கு தேவை கம்யூனிஸமோ, சோஷியலிஸமோ இல்லை; ராம ராஜ்ஜியம்தான்!' - சட்டசபையில் யோகி ஆதித்யநாத்