காவல் நிலையத்திற்கு வரும் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என விளம்பரப்பலகை வைத்து காவல் ஆய்வாளர் அசத்தி வருகிறார். காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கச் சென்றால் லஞ்சம் கொடுத்து தான் காரியத்தை சாதிக்க முடியும் என்ற மனோநிலை மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு விதி விலக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஆய்வாளர் வைத்துள்ள விளம்பரப் பலகை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை மாநகர் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றிய சரவணன், ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவர், காவல் நிலையத்தில் வைத்துள்ள விளம்பரப் பலகை தற்போது வைரலாகி வருகிறது. அதில், தான் யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை. தன்னுடைய பெயரை சொல்லி யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். புகாரை முடித்து தருவதாக கூறி லஞ்சம் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என விளம்பரப் பலகை வைத்திருப்பது அங்கு வரும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
http://dlvr.it/SDyN3Y
Wednesday, 8 December 2021
Home »
» "லஞ்சம் கொடுக்க வேண்டாம்" - விளம்பரப் பலகை வைத்து அசத்தும் காவல் ஆய்வாளர்