உலகில் வாழும் மிக பழமையான நில விலங்கு என 190 வயதான ஜொனாதன் ஆமை மற்றொரு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
"இந்த ஆண்டு தனது 190 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜொனாதன், இதுவரை வாழ்ந்த ஆமைகளிலேயே மிகவும் வயதான ஆமை" என்று கின்னஸ் உலக சாதனை புத்தகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான கடல் ஆமைகள், ஆற்று நீர் ஆமைகள் மற்றும் நிலவாழ் ஆமைகளில் மிகவும் பழமையான ஆமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பழமையான செலோனியன் ஆமை 188 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தது.
இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட செயின்ட் ஹெலினாவில் தான் இந்த ஆமை வாழ்கிறது. அந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, "ஜொனாதன் குளிர்காலத்தை நன்கு கடந்து வந்துள்ளது , இப்போது நன்றாக மேய்கிறது. வயது மூப்பினால் பார்வை மற்றும் வாசனை திறன் இல்லாமல் இருப்பதால் கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகளை அதிகரிக்க கால்நடை மருத்துவப் பிரிவு அதற்கு வாரத்திற்கு ஒரு முறை உணவளிக்கிறது" என தெரிவித்துள்ளது.
ஜொனாதன் ஆமை 1832ல் பிறந்ததாக நம்பப்படுகிறது, இதனால் அதற்கு 2022இல் 190 வயதாகிறது. இந்த ஆமை 1882 ஆம் ஆண்டு சீஷெல்ஸிலிருந்து செயின்ட் ஹெலினாவுக்கு வந்தபோது, முழுமையாக முதிர்ச்சியடைந்து, குறைந்தது 50 வயதுடையதாக இருந்தது என்ற அடிப்படையில் ஜொனாதனின் வயது மதிப்பிடப்பட்டுள்ளது.
1882 மற்றும் 1886 க்கு இடையில் எடுக்கப்பட்ட ஜெனோதனின் ஒரு பழைய புகைப்படம் வெளிப்பட்டபோது அதன் மதிப்பிடப்பட்ட வயது உண்மையானது என பலரும் ஆதரித்தனர். ஜோனதன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் செயின்ட் ஹெலினாவின் ஆளுநரின் தோட்ட இல்லத்திலேயே வாழ்ந்தது.
ஜொனாதன் 1882இல் சர் வில்லியம் கிரே-வில்சனுக்கு பரிசளிக்கப்பட்டதிலிருந்து, அந்த அரசிற்கும், மாளிகைக்கும் 31 ஆளுநர்கள் வந்து சென்றுள்ளனர். ஜொனாதன் இன்றும் அதே மைதானத்தில் சுற்றித் திரிகிறது, அங்கு அதோடு டேவிட், எம்மா மற்றும் ஃப்ரெட் ஆகிய மூன்று பெரிய ஆமைகளுடன் வாழ்கிறது.
http://dlvr.it/SH5T94
Friday, 14 January 2022
Home »
» 190 வயதான 'ஜோனாதன்' - கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகவும் வயதான ஆமை