வரும் 2030-இல் இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பான் நாட்டை முந்தும் என IHS Markit தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் மூலம் ஆசியாவில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெர்மனி மற்றும் பிரிட்டனை இந்தியா கடக்கும் என தெரிவித்துள்ளது IHS.
தற்போது இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இருந்தாலும் ஆசிய அளவில் வரும் 2030-இல் பொருளாதார ரீதியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி காரணமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அதே போல எதிர்வரும் தசாப்தத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக உலக அளவில் அதிவேகமாக வளர்ச்சி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 உடன் 2021-22 காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.3 சதவிகிதத்திலிருந்து 8.2 என உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்ய விரும்பும் பகுதியாக இந்தியா மாறி உள்ளதாகவும். இந்திய நுகர்வோர் சந்தை இதற்கு முக்கியக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ், வங்கி மற்றும் நிதி சேவை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பரவலாக இந்திய தொழில் துறையில் வாய்ப்புகள் இருப்பதும் இதற்கு பிரதான காரணம் என தெரிவித்துள்ளது IHS.
http://dlvr.it/SGkr71
Saturday, 8 January 2022
Home »
» 2030 வாக்கில் பொருளாதாரத்தில் ஜப்பானை இந்தியா முந்தும்: IHS தகவல்