2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் வந்த 2,177 பயணிகளுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் வந்த 2,177 பயணிகளுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத 31 நபர்களிடம் ரூ.15,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Implementation of the double dose vaccination rule - 2177 passengers not having double vaccination certificate in Chennai Suburban area were denied travel in train. Total cases booked for not wearing mask - 31 cases & ₹15500/- was levied as fine. Please take your vaccine today.— DRM Chennai (@DrmChennai) January 10, 2022
இதையும் படிக்க: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இல்லம் தேடி தடுப்பூசி திட்டத்தை அறிவித்தது சென்னை மாநகராட்சி
http://dlvr.it/SGvHsm
Tuesday, 11 January 2022
Home »
» சென்னை: தடுப்பூசி போடாத 2,177 பயணிகளுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு