உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றுவரும் பா.ஜ.க ஆட்சியில், மூன்றாவது அமைச்சராக தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருப்பதாக அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாகத் தேர்தலுக்கு தயாராகிவரும் நிலையில், தற்போது வரை மூன்று அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
முதலாவது நபராக பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவாமி பிரசாத் மௌரியா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஐந்து பேரும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். பிறகு சுவாமி பிரசாத் மௌரியா அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.அமைச்சர் தரம் சிங் சைனி
இதைத் தொடர்ந்து, தாரா சிங் சௌகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில், மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்திருக்கிறார். இவரும் சமாஜ்வாடி கட்சியில் சேர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை மூன்று அமைச்சர்கள், ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக-விலிருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SH3HhL
Thursday, 13 January 2022
Home »
» உத்தரப்பிரதேசம்: பதவியை ராஜினாமா செய்த 3-வது பாஜக அமைச்சர்! - அகிலேஷ் யாதவ் உடன் சந்திப்பு