தமிழ் நாட்டில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடுவது பொல இந்தியாவின் பல பகுதிகளில் இதே நாளில் வேறு வேறு பெயர்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி விழா என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வசலசபள்ளி எனும் ஊரில் எல்லம்மா கோயில் உள்ளது. சங்கராந்தி விழாவை கிடா வெட்டி கொண்டாடுவது அந்த உள்ளூர் மக்களின் வழக்கம். இந்த விழா கடந்த 16- ஆம் தேதி நடைபெற்றது.ஆந்திரா: கோவில் திருவிழாவில் மனித பலி
கிடா வெட்டும் பொறுப்பில் இருந்த சலபதியும், ஆடுகளைப் பிடித்து வரும் பொறுப்பில் சுரேஷும் இருந்ததாக சொல்லப்படுகிறது. விழா நடைபெற்ற அன்று சலபதி மதுபோதையில் இருந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபோதையில் இருந்த சலபதி, ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆடுகளைப் பிடித்து வந்த சுரேஷ் என்பவரை வெட்டி விட்டார்.
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுரேஷ், மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை சலபதியைக் கைது செய்து விசாரித்து வருகிறது.
Also Read: ஆந்திரா: பெண் இன்ஜினீயர் கொலை; கொரோனா மரணம் என நாடகம்! - தீ வைத்து எரித்த கணவர் சிக்கியது எப்படி?
http://dlvr.it/SHKMjn
Tuesday, 18 January 2022
Home »
» ஆடுக்கு பதிலாக ஆட்டைப் பிடித்து வந்தவரை வெட்டிய நபர்! - ஆந்திர சங்கராந்தி விழாவில் மதுபோதையால் சோகம்