உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் களத்தில், பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. கடந்த ஐந்து, ஆறு மாதங்களில் அங்கு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி. ``யோகி ஆதித்யநாத் மீது உ.பி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அகிலேஷ்தான் மாற்று என மக்கள் நினைக்கிறார்கள்'' என சமாஜ்வாடி கட்சியினர் பிரசாரம் செய்துவருகிறார்கள். ``சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் ரெளடியிஸம் அதிகரித்துவிடும். மாநிலம் வளர்ச்சியடையாமல் போய்விடும்'' என பா.ஜ.க-வினர் வாக்குகளைச் சேகரித்துவருகிறார்கள்.சுவாமி பிரசாத் மெளரியா, அகிலேஷ்
Also Read: உ.பி தேர்தல் 2022: `அகிலேஷ் தான் ஜெயிப்பார்!' - ராஜா நேர்காணல்
இந்த நிலையில் கடந்த வாரம், பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலர் சமாஜ்வாடி கட்சிக்குத் தாவி, யோகி ஆதித்யநாத்துக்கு ஷாக் கொடுத்தனர். உத்தரப்பிரதேச அரசியலில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மக்களின் முகமாக விளங்கும் சுவாமி பிரசாத் மெளரியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-விலிருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக நான்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் கட்சியிலிருந்து விலகினர். தொடர்ந்து, அமைச்சர் தரம்சிங் சைனியும் பா.ஜ.க-விலிருந்து விலகினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 14) அன்று, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சுவாமி பிரசாத் மெளரியா, தரம்சிங் சைனி ஆகிய இருவரும் சமாஜ்வாடியில் இணைந்தனர். அவர்களோடு, கட்சியிலிருந்து விலகிய ஐந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் சமாஜ்வாடியில் சேர்ந்தனர். சிவப்பு தலைப்பாகை அணிவித்து அவர்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டார் அகிலேஷ்.
இதையடுத்து, யோகி அமைச்சரவையின் மற்றொரு அமைச்சரான தாரா சிங் செளகானும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-விலிருந்து விலகினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 16) அன்று அகிலேஷ் யாதவைச் சந்தித்த தாரா சிங், தன்னை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக் கொண்டார். இது தவிர பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் அப்னா தளம் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் சமாஜ்வாடியில் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.யோகி ஆதித்யநாத்பா.ஜ.க-விலிருந்து விலகி சமாஜ்வாடியில் ஐக்கியமான தலைவர்கள் அனைவரும், ``பா.ஜ.க-வை வீழ்த்தி, அகிலேஷை உ.பி-யின் முதல்வராக்குவோம்'' என்று ஒரே குரலில் பேசிவருகிறார்கள். அதோடு, `வரும் நாள்களில் மேலும் சில பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சமாஜ்வாடியில் இணைவார்கள்' என்றும் சொல்லிவருகிறார்கள்.
சமாஜ்வாடி ஆதரவாளர்கள் பலரும், ``அகிலேஷ்தான் உ.பி-யின் அடுத்த முதல்வர் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட காரணத்தால்தான், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் சமாஜ்வாடியில் இணைந்துவருகிறார்கள்'' என்று பிரசாரம் செய்துவருகின்றனர்.
சமாஜ்வாடி ஆதரவாளர்கள் சொல்லிவருவது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``பா.ஜ.க-விலிருந்து தொடர்ச்சியாக ஓ.பி.சி தலைவர்கள் வெளியேறி, சமாஜ்வாடியில் இணைந்துவருகிறார்கள். யாதவ் சமூகத்தினரும், இஸ்லாமியர்களும்தான் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு வங்கிக்கு பலம் சேர்ப்பவர்கள். கடந்த முறை ஓ.பி.சி தலைவர்களை ஒன்று சேர்த்து, அதிக இடங்களைக் கைப்பற்றியது பா.ஜ.க. தற்போது ஓ.பி.சி தலைவர்கள் சமாஜ்வாடியில் இணைந்திருப்பதை அடுத்து, பலம்பெற்றிருக்கிறது அந்தக் கட்சி. இது பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.அகிலேஷ் யாதவ்
Also Read: உ.பி: ஓர் அமைச்சர்; மூன்று எம்.எல்.ஏ-க்கள்! - பாஜக-விலிருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்த பின்னணி
`அகிலேஷ்தான் அடுத்த முதல்வர் என்று தெரிந்துகொண்டதால்தான், பா.ஜ.க-வினர் சமாஜ்வாடியில் இணைகிறார்கள்' என்று சொல்லிவிட முடியாது. பா.ஜ.க மீதும், குறிப்பாக யோகி ஆதித்யநாத்தின் தலைமை மீதும் இருந்த அதிருப்தியின் காரணமாகவே ஓ.பி.சி தலைவர்கள் கட்சியை விட்டு விலகினர். உ.பி-யில், பா.ஜ.க-வுக்கு இணையாக சமாஜ்வாடி கட்சி மட்டுமே தேர்தல் களத்தில் நின்று கொண்டிருப்பதால், யோகியை வீழ்த்த அந்தக் கட்சியில் இணைந்துவிட்டனர். இதுதான் பா.ஜ.க-விலிருந்து விலகியவர்கள், சமாஜ்வாடியில் தங்களை இணைத்துக் கொண்டதற்கான காரணமாக இருக்க முடியும். முடிவு எப்போதும் மக்கள் கையில் தான்'' என்கிறார்கள்.
http://dlvr.it/SHH3T7
Monday, 17 January 2022
Home »
» `ரிசல்ட்' தெரிந்துதான் அகிலேஷிடம் ஐக்கியம் ஆகிறார்களா உ.பி பாஜக தலைவர்கள்?!