திம்பம் மலைப்பாதைக்குச் செல்ல ஒரு லாரிக்கு தலா 100 ரூபாய் வீதம் பண்ணாரி R.T.O சோதனைச்சாவடியில் லஞ்சம் வசூலிக்கப்படுவது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
வன விலங்குகளைப் பாதுகாத்திடும் நோக்கில், திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை விலக்கக் கோரி ஒரு புறம் போராட்டங்கள் நடைபெறும் சூழலில், பண்ணாரி RTO சோதனைச்சாவடியில் ஒரு வாகனத்துக்கு தலா 100 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது. லாரி ஓட்டுநர்களிடம் தலா 100 ரூபாயை சோதனைச்சாவடியைச் சேர்ந்த நபர் லஞ்சமாக பெறும் காட்சியை புதிய தலைமுறை படம்பிடித்துள்ளது.
லஞ்சம் கொடுக்க மறுத்தால் வாகனங்களை அனுமதிக்காமல் ஏதாவது காரணங்கள் கூறி தாமதிக்கப்படும் என்று ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். திம்பம் மலைப்பாதையில் தினமும் சுமார் நான்காயிரம் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. ஒரு வாகனத்திற்கு 100 ரூபாய் எனில், ஒரு நாளில் 4 லட்சம் ரூபாய், ஒரு மாதத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சமாக ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடியில் வசூலிக்கப்படுவதாக லாரி ஓட்டுநர்கள் புகார் கூறுகின்றனர்.
http://dlvr.it/SJnzZs
Friday, 11 February 2022
Home »
» திம்பம் மலைப்பாதைக்குச் செல்ல லாரிக்கு தலா ரூ.100 லஞ்சம்