ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரூசா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில், மாணவி அரூசா சமூக வலைதளங்களில் ஹிஜாப் அணியாமல் தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஹிஜாப் தொடர்பான விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கும் வேளையில், அரூசா ஹிஜாப் அணியாமல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சில இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் மாணவி அரூசாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவருவதாகத் தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஹிஜாப் சர்ச்சை
இது குறித்து அரூசா கூறுகையில், ``நான் ஒரு நல்ல முஸ்லிம் என்பதை நிரூபிக்க ஹிஜாப் அணியத் தேவையில்லை. ஒருவர் ஹிஜாப் அணிவதும், அணியாததும் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. நான் என்னை விமர்சித்தவர்களைவிட அல்லாவை நேசிக்கிறேன். நான் இதயத்தால் ஒரு முஸ்லிம். ஹிஜாப்பால் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
Also Read: ஹிஜாப் விவகாரம்: ``மத சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது!”- அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர தூதர்
http://dlvr.it/SJy1KH
Monday, 14 February 2022
Home »
» காஷ்மீர்:12-ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம்;ஹிஜாப் அணியாததால் மாணவிக்குக் குவிந்த கொலை மிரட்டல்கள்