10, 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகலில் நடக்க வேண்டிய தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சென்னையில் உள்ள 8 பள்ளிகளுக்கு காலையிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பள்ளியிலிருந்து வினாத்தாள்கள் கசிந்தன என்பது தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்புதல் தேர்வுகள் தொடங்குவதற்கு சற்று முன்னரே கேள்வித்தாள்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அப்படி அனுப்பிவைக்கப்பட்ட கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முன்கூட்டியே பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு கசிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை முதல் முன்கூட்டியே கேள்வித்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நேற்று அறிவியல் மற்றும் கணிதம் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய 12ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தேர்வுகள் துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் இருந்துதான் இந்த வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்தே அடுத்தகட்ட விசாரணை தொடங்கியுள்ளன. தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமீபத்திய செய்தி: இப்படித்தான் இருக்கும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில்! - 3டி வீடியோ வெளியீடு
http://dlvr.it/SJyYkV
Monday, 14 February 2022
Home »
» 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வில், வணிகவியல் வினாத்தாளும் கசிந்ததாக புகார்