உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் அந்த திருமண விழாவில் பங்கேற்றனர். திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது வீட்டின் பின்பகுதியில் இரும்பு கம்பி வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றின் மீது ஏராளமான பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அந்த சமயத்தில், யாரும் எதிர்பாராத விதமாக கம்பி வலை உடைந்து, அதில் நின்றிருந்த பெண்கள் அனைவரும் கிணற்றில் விழுந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.விபத்து நடந்த கிணறு
சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற தீயணைப்பு மீட்புப் படையினர் கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
15-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த பெண்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல, சம்பவ இடத்திலேயே 11 பெண்களும், சிகிச்சை பலனின்றி 2 பெண்களும் உயிரிழந்தனர். போலீஸார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரதமர் - குடியரசுத் தலைவர்
இந்தச் சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல பிரதமர் மோடி, ``இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
http://dlvr.it/SK7K48
Thursday, 17 February 2022
Home »
» திருமண வீட்டில் சோகம்... கிணற்றில் விழுந்து 13 பெண்கள் பலி; பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்!