உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதனால், அங்கு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப் பத்திரத்தில், ஆறு வங்கிக் கணக்குகளில் ரூ.1,54,94,054 ரொக்கமும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போனும், ரூ.1 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கியும், ரூ.80,000 ஆயிரம் மதிப்பிலான ரிவால்வரும், ரூ.49,000 மதிப்பிலான ஆபரணங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ருத்ராட்ச மாலையும், 20 கிராம் தங்க நகைகளும் தன்னுடைய சொத்தாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல யோகி தனக்குச் சொந்தமாக கார்கூட இல்லையென்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.யோகி ஆதித்யநாத்
மேலும், தனது ஆண்டு வருமானம் குறித்து யோகி அளித்திருக்கும் தகவலில், 2017-18-ல் ரூ.14,38,670; 2018-19-ல் ரூ.18,27,639; 2019-20-ல் ரூ.15,68,799; 2020-2021-ல் ரூ.13,20,653 என்று குறிப்பிட்டிருக்கிறார்.
யோகியின் பிராமணப் பத்திரத்தில் அவர் பெயரில் எந்த விளைநிலமும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Also Read: உ.பி சட்டமன்றத் தேர்தல்: யோகிக்கு எதிராகக் களமிறங்கும் `தர்ணா' ஆசிரியர்!
http://dlvr.it/SJX5bB
Monday, 7 February 2022
Home »
» உ.பி: `ரூ.1.5 கோடி சொத்து... சொந்தமாக கார் இல்லை' - பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் யோகி!