மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று வந்திறங்கியது. அந்த விமானத்தை விமானி மஜித் அக்தர் என்பவர் ஓட்டி வந்தார். தரை இறங்கும்போது, ஓடுபாதையில் தற்காலிக தடுப்புச் சுவரில் மோதி அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் அந்த விமானம் பலத்த சேதமடைந்தது. இது தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு அந்த விமானத்தை இயக்கிய விமானி மஜித் அக்தர் மீது வழக்கு பதிந்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச அரசு கடந்த வாரம் விமானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விபத்தின் காரணமாக சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு விமானம் பழுதாகிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. இதன் விளைவாக மற்ற தனியார் விமானங்களை வாடகைக்கு எடுக்கப்பட்டதால், மேலும் ரூ.25 கோடியைச் சேர்த்து விமானிக்கு ரூ.85 கோடி அபராதம் விதித்தது.விபத்துகுள்ளான விமானம்
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விமானி மஜித் அக்தர், ``குவாலியர் விமான நிலையத்தில் தற்காலிக தடுப்புச் சுவர் ஏற்படுத்தியதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் எனக்குத் தெரிவிக்கவில்லை. மேலும், விமானத்துக்கு ஏன் காப்பீடு செய்யவில்லை என்றும் தெரியவில்லை. காப்பீடு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. விமானம் காப்பீடு செய்யாததற்கு யார் காரணம் என விசாரணை நடத்த வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
அண்மையில் இது தொடர்பாக விமானி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், ``27 ஆண்டுகளுக்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவமுள்ள எனக்கு, குவாலியர் ஏ.டி.சி-யில் இருந்து பெறப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் கொண்ட கருப்பு பெட்டி வழங்கப்படவில்லை. எனக்கு அறிவுறுத்தல் வந்ததா என அதில் இருக்குமே?" என்று குற்றம்சாட்டியிருந்தார்.விபத்துகுள்ளான விமானம்
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) விமானி அக்தரின் விமான ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டுக்கு முடக்கி உத்தரவிட்டிருக்கிறது. விமான விபத்துப் புலனாய்வுப் பிரிவினரும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
Also Read: ஆந்திரா: `ஒரு மாவட்டம்... ஒரு விமான நிலையம்’ - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!
http://dlvr.it/SJY8ym
Tuesday, 8 February 2022
Home »
» மத்தியப் பிரதேசம்: விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய விமானிக்கு ரூ.85 கோடி அபராதம்!