இந்த மாதம் 10 - தேதி முதல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ``வரும் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற வேண்டும். மக்கள் அந்தக்கட்சிக்கு ஆதரவளித்தால், அகிலேஷ் யாதவ் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது" என்றார்.மம்தா பானர்ஜி
மேலும், மம்தா பானர்ஜி இன்று லக்னோவுக்கு வந்து நாளை அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பிலும் அதைத் தொடர்ந்த பேரணியிலும் பேசுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `தேவைப்பட்டால் உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்காக பிரசாரம் செய்வேன்' என்று அகிலேஷ் யாதவிடம், மம்தா பானர்ஜி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி 18-ம் தேதி அன்று, சமாஜ்வாடி கட்சியின் துணைத் தலைவர் கிரண்மய் நந்தா, ``மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராடிய விதம் முன்னெப்போதும் இல்லாதது. பா.ஜ.க-வின் கூக்குரலுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. அகிலேஷ் யாதவ்
உ.பி சட்டமன்றத்தில் அவர் எங்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விரும்புகிறார்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேசம் வருகை தருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய மாபெரும் எதிர்க்கட்சி கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு மம்தா பானர்ஜிக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: ``பாஜக-வை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும்!" - மம்தா பானர்ஜி
http://dlvr.it/SJXfMP
Monday, 7 February 2022
Home »
» உ.பி: அகிலேஷுக்கு ஆதரவாக மம்தா; சூடுபிடிக்கும் தேர்தல்களம்!