தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு நாய்கள் என்றால் எப்போதும் அலாதி பிரியம். அதனால் மும்பையில் உள்ள டாடா தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸில் தெருநாய்களுக்கென்று தனி இடம் இருக்கிறது. தினமும் அங்கு வரும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுக்கப்படுவது வழக்கம். அப்படி வரும் தெரு நாய்களில் ஒன்று மட்டும் ரத்தன் டாடாவிற்கு மிகவும் பிரியமானது. கோவா என்று பெயரிடப்பட்டுள்ள அந்நாய் ரத்தன் டாடா வந்துவிட்டால் அவருடன் அலுவலகத்திற்குள் சென்று விடும். அதோடு மட்டுமல்லாமல் ரத்தன் டாடாவுடன் அலுவலக மீட்டிங்களில் கூட கலந்து கொள்ளும். கரிஷ்மாவுடன் ரத்தன் டாடா
அது போன்ற ஒரு நிகழ்வை அவரை நேர்காணல் எடுத்த சென்ற பெண் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனார். கரிஷ்மா மேத்தா என்ற பெண் 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற அமைப்பிற்காக ரத்தன் டாடாவை நேர்காணல் செய்ய சென்றார். ரத்தன் டாடாவைச் சந்திக்க சென்ற போது அவரது இருக்கைக்கு அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் கோவா சர்வசாதாரணமாக அமர்ந்திருந்தது. அதனைப் பார்த்தவுடன் கரிஷ்மா அதிர்ச்சியாகிவிட்டார்.
இது குறித்து கரிஷ்மா கூறுகையில், "நான் ரத்தன் டாடாவை பார்ப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு வெளியில் காத்திருந்த போது அவரது இருக்கைக்கு அருகில் நாய் ஒன்று அமர்ந்திருந்து எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அங்கு வந்த ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிடம் நாய்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொன்னேன். இதனை ரத்தன் டாடா கேட்டிருக்கவேண்டும். ரத்தன் டாடா
ரத்தன் டாடா மனிதர்களிடம் பேசுவது போன்று தனது இருக்கைக்கு அருகில் இருந்த நாயிடம் பேசினார். 'கோவா, அவர் உன்னை கண்டு பயப்படுகிறார். அதனால் நல்ல பிள்ளையாக அமர்ந்திருக்கவேண்டும்' என்று நாயிடம் கேட்டுக்கொண்டார். உடனே அவரது பேச்சைக்கேட்ட நாய் அப்படியே அமைதியாக இருந்து கொண்டது. நான் அங்கு இருந்த 40 நிமிடத்தில் கோவா என் அருகில் வரவே இல்லை. கோவா குறித்து ரத்தன் டாடா என்னிடம் கூறுகையில் கோவா ஒரு தெரு நாய் என்றும் அதனை அவர் தத்து எடுத்துக்கொண்டதாகவும் என்னிடம் தெரிவித்தார் என்று கரிஷ்மா கூறினார். கோவா நாள் முழுவதும் அலுவலகத்தில் ரத்தன் டாடாவுடனே இருக்கிறது. அதோடு அவர் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் கோவாவும் சேர்ந்து கலந்து கொள்கிறது.
http://dlvr.it/SJjW4v
Thursday, 10 February 2022
Home »
» ரத்தன் டாடாவுடன் தினமும் அலுவலகக் கூட்டங்களில் பங்கேற்கும் தெருநாய் கோவா... காரணம் என்ன?