கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா அண்மையில், ``காவிக்கொடி எதிர்காலத்தில் இந்தியாவின் தேசியக் கொடியாக மாறலாம்.செங்கோட்டையில் ஒரு நாள் அது ஏற்றப்படும்'' என்று கூறினார். இவரின் அந்த பேச்சு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகக் கோரி கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர்.அமைச்சர் ஈஸ்வரப்பா
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுப்பெற ஆரம்பித்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, ஆகியோர் சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் இரவில் விடிய, விடிய அங்கேயே படுத்து உறங்கி போராட்டம் நடத்தினர். அவரை பதவியிலிருந்து நீக்கும்வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்று கோஷமிட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தேநீர் மற்றும் காபி ஆகியவை ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
``ஈஸ்வரப்பாவின் பேச்சிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டுக் காட்டி காங்கிரஸ்காரர்கள் மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பெண் நிருபரிடம் சர்ச்சைக்குரிய பதில்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஈஸ்வரப்பா!
http://dlvr.it/SKBpyg
Friday, 18 February 2022
Home »
» தேசியக்கொடி சர்ச்சை: சட்டப்பேரவைக்குள் விடிய விடிய உறங்கி தர்ணா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்!