கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையில் பேசிய மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ``முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார். ஆரிப் முகமது கான்முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக்கு கேரள பொறியாளர் நியமனமா? எதிர்க்கும் தமிழக விவசாயிகள்!
இதுகுறித்து பேசிய அவர், ``தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கேரள அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை, அதேசமயம் முல்லை பெரியாற்றின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதில் கேரள அரசு திட்டவட்டமாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே, முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும்" என பேசியுள்ளார்.
முல்லை பெரியாறு அணையில் கூடுதல் அடி தண்ணீர் தேக்கினால், உடைப்பெடுத்து வெள்ளம் உண்டாகும் என கேரள அரசு தமிழகத்தின் கோரிக்கையை மறுத்து வருகிறது. இந்நிலையில், முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டால் முழு தண்ணீரையும் கேரளாவே கொண்டாடும் நிலை வந்துவிடும் என தமிழக மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.முல்லை பெரியாறு அணை`முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்!' - கேரள கவர்னரின் பேச்சால் சர்ச்சை!
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசோடு ஆலோசிக்கப்படும் என்றும், 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்றும் கேரள ஆளுநர் பேசியதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
http://dlvr.it/SKDLLT
Friday, 18 February 2022
Home »
» முல்லை பெரியாறு விவகாரம்: ``மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே புதிய அணை!" - கேரள ஆளுநர்