சிவசேனா செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் செய்தியாளர்களைச் சந்திப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை முழுவதும் இருந்து சிவசேனா தொண்டர்கள் சிவசேனா அலுவலகத்திற்கு வெளியில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``மத்திய விசாரணை ஏஜென்சிகள் எங்களுக்கு இடையூறு கொடுத்து வருகின்றன. இந்த ஏஜென்சிகளை பயன்படுத்தி எங்களது தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். சில பா.ஜ.க தலைவர்கள் மார்ச் 10-ம் தேதி சிவசேனா கூட்டணி அரசு கவிழும் என்று சொல்கிறார்கள். நான் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவிற்கு கடிதம் எழுதிய பிறகுதான் இந்த வதந்திகள் பரவ ஆரம்பித்தன. சேனா பவனில் கூடிய தொண்டர்கள்
தாக்கரே குடும்பத்திற்கு அலிபாக்கில் 19 பங்களாக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பத்திரிகையாளர்களை பிக்னிக் அழைத்துச் செல்கிறேன். அங்கு பங்களா இல்லையென்றால் பங்களா இருப்பதாகச் சொன்னவர்கள் (பா.ஜ.க-வினர்) பங்களா இருக்கும் இடத்தை காட்டவேண்டும். மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க நாங்கள் உதவ மறுத்ததால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த ஆரம்பித்தது. சிவசேனா கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகால ஆயுளை பூர்த்தி செய்யும். 2024-ம் ஆண்டு மத்தியில் புதிய அரசு பதவியேற்கும். எப்படி வளைந்து கொடுக்கவேண்டும் என்று பாலாசாஹேப் தாக்கரே எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அமலாக்கப்பிரிவு தேசியப் பாதுகாப்பு தொடர்பாக மும்பையில் ரெய்டு நடத்தினால் அதற்கு மகாராஷ்டிரா அரசு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியது அவசியம். குஜராத்தில் நடந்துள்ள மிகப்பெரிய வங்கி மோசடியையும் அமலாக்கப்பிரிவு கவனிக்கவேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மோசடி குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவிடாமல் யார் தடுத்து நிறுத்தியது ?அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விரைவில் ஜாமீனில் வருவார்.
நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் போகும் போது அவர்களும் (பா.ஜ.க-வினர்) என்னுடன் வருவார்கள். பி.எம்.சி வங்கி மோசடி தொடர்பாக பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையா மற்றும் அவர் மகன் கைது செய்யப்படவேண்டும். நிகான் இன்ப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் கிரீத் சோமையாவும், பி.எம்.சி வங்கி மோசடியில் தொடர்புடைய ராகேஷ் வாத்வானும் பங்குதாரர்கள் ஆவர். நான் மத்திய உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு என் குடும்பத்தினரையும், என்னோடு தொடர்புடையவர்களையும் விசாரணை ஏஜென்சிகள் சித்ரவதை செய்வது நல்லது அல்ல என்று சொன்னேன். பாஜக
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. களங்கத்தை ஏற்படுத்தி அமலாக்கப்பிரிவு மற்றும் இதர விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சதி நடக்கிறது. நான் இப்போது தெரிவிக்கும் தகவல்கள் ஒரு சேம்பிள்தான். விரைவில் ஆதாரங்களுடன் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அமலாக்கத்துறை முன்பு நான் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த தயாராக இருக்கிறேன். ஆனால், அதுவே கடைசி பத்திரிகையாளர் சந்திப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
சஞ்சய் ராவுத்தின் இந்தப் பேட்டியால் சிவசேனா மற்றும் பா.ஜ.க இடையிலான கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் பிரிந்தன. மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனா பா.ஜ.க-விற்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாடு கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ``பாஜக-வின் ஏஜென்ட் அன்னா ஹசாரே!'' - என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்?
http://dlvr.it/SK1xv5
Tuesday, 15 February 2022
Home »
» ``நான் சிறைக்குச் சென்றால் பாஜக தலைவர்களும் என்னுடன் வருவார்கள்!" - சிவசேனா எம்.பி பேட்டி