உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க., தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், `விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். குறைந்தபட்சம் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தீபாவளி, ஹோலி பண்டிகைகளுக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவசப் பொதுப் போக்குவரத்து பயணம். கல்லூரி மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனங்கள், விதவைகளுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ 1,500-ஆக உயர்த்தப்படும்' உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. நரேந்திர மோடி - அமித் ஷா
இவை தவிர மாநிலத்தின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் அந்தத் தேர்தல் அறிக்கையில் அடங்கும்.யோகி ஆதித்யநாத்
தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்ட பின்பு பேசிய அமித் ஷா, ``முஸ்லிம் ஆண்கள், இந்துப் பெண்களை மயக்கி அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள். இதைத் தடுக்க 'லவ் ஜிஹாத்' குற்றவாளிகளுக்கு எதிராக, கடந்த நவம்பரில் யோகி ஆதித்யநாத் அரசு இயற்றிய அவசரச் சட்டத்தின்படி, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றார்.
Also Read: உ.பி தேர்தல்: நீதிக்காக 600 கி.மீ பயணிக்கும், `தாஜ்மஹால்’ மாவட்டம்! - ஆக்ரா கள நிலவரம் என்ன?
http://dlvr.it/SJbVxg
Tuesday, 8 February 2022
Home »
» உ.பி: `விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் முதல் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வரை' - பாஜக தேர்தல் அறிக்கை