`கந்தாட குடி', `சந்தனத்தின் உறைவிடம்' எனச் சிறப்பு பெயர் பெற்றது கர்நாடகா. ஆனால், சந்தன சாகுபடியில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளால், கர்நாடகாவின் சந்தன சாகுபடி கணிசமாகக் குறைந்து வருகிறது. எனவே, அரசு தற்போது விதிகளைத் தளர்த்துவதாக ஆலோசித்து வருகிறது. அதாவது, விவசாயிகள் பொது சந்தையில் சந்தன மரங்களை விற்கலாம். அரசு ஆலோசித்து வரும் இந்த நடவடிக்கையானது, மாநிலத்தின் இழந்த பெருமையை மீண்டும் மீட்டுத் தரும் என கர்நாடக மக்கள் கருதுகின்றனர்.
கர்நாடக அரசு கட்டுப்பாட்டின்படி, சந்தன மரங்கள் தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டாலும், அது அரசாங்கச் சொத்தாகக் கருதப்படும். விவசாயிகள் மரங்களை விற்க வனத்துறையினரை நாட வேண்டும். அதாவது, சந்தை மதிப்பைவிட மிகக் குறைவான விலையில் மரங்களை அரசுக்கு மட்டுமே விற்க வேண்டும். மரம் வெட்டுவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளிடம் 10 சதவிகித `மேற்பார்வைக் கட்டணமும்’ கர்நாடக அரசு வசூலிக்கிறது.சந்தன மரம்‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்!
மேலும் கடத்தல்காரர்களால் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டால், காவல்துறை மற்றும் வனத்துறையினரால் தேவையற்ற துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், தனியார் நில உரிமையாளர்கள் சந்தன மரத்தை மிகவும் கவனத்துடன் பாதுகாப்பார்கள். பல விவசாயிகள் இது போன்ற பிரச்னையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இளம் மரங்களையே வெட்டிவிடுவர்.
அதோடு மட்டுமல்லாமல் விலைமதிப்பற்ற சந்தன மரத்தின் வரத்து அதிகரித்தால், இயற்கையாகவே அதன் விலை குறையும் என்பதால், சிலர் மட்டும் இதிலிருந்து லாபம் பெற வேண்டுமென நோக்கத்துக்காகவே இந்தக் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதாக நீண்ட காலமாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒரு சந்தன மரம் முழுவதுமாக முதிர்ச்சியடைந்து நல்ல விலையைப் பெறுவதற்கு சுமார் 25 - 30 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் சிலர் அதை 15 ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்த விலையில் விற்க விரும்புகிறார்கள். சந்தன கட்டை வேலூர்: சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி! - சித்தூரைச் சேர்ந்த 2 பேருக்குச் சரமாரி அடி
இந்நிலையில் கர்நாடக அரசின் பொது சந்தையில் சந்தன மரங்களை விற்கும் திட்டம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் மற்றும் அழகுசாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள் மற்றும் சோப்புத் தொழில்களில் அதிகரித்து வரும் சந்தனத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
1,600 ஹெக்டேருக்கு மேல் சந்தன மரங்களைப் பயிரிட்டு வரும் வனத்துறை, ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. சந்தன சாகுபடி குறித்த தொலைநோக்குப் பார்வை மத்திய மற்றும் மாநிலங்களில் இல்லாததால் 30,000 ஹெக்டேர் பரப்பளவில் சந்தன மரங்களை சாகுபடி செய்தாலும், வரும் காலங்களில் இந்தியா சந்தன சாகுபடியில் இறக்குமதியாளராகத்தான் தொடரும் எனக் கூறப்படுகிறது.
http://dlvr.it/SK7mcc
Thursday, 17 February 2022
Home »
» `இனி சந்தன மரங்களை வெளிச்சந்தையில் விற்கலாமா?' - கர்நாடகாவின் புதிய திட்டம் என்ன?