மும்பை புறநகர் ரயில்களில் தினமும் பலர் அடிபட்டு உயிரிழக்கின்றனர். அவர்களில் பலர் யாரென்றே அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. சிலர் விபத்தில் உயிரிழக்கிறார்கள். பலர் குடும்ப பிரச்னை, நிதி நெருக்கடியால் ரயில்கள் முன்பு பாய்ந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. மும்பை நாலாசோபாரா ரயில் நிலையத்துக்கு ராஜு வாக்ளே(32) என்பவர் தனது 3 வயது மகனுடன் வந்தார். அவர் ரயில் நிலையத்துக்கு அருகில் தண்டவாளத்தில் மகனை கையில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார். அந்நேரம் அந்த வழியாக சர்ச்கேட் செல்லும் புறநகர் ரயில் ஒன்று வந்தது. உடனே ராஜு அந்த ரயில் முன்பு தனது மகனுடன் பாய்ந்துவிட்டார். இதில் ராஜு தூக்கிவீசப்பட்டார். அவரது 3 வயது மகன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ரயில்
ரயில் மோட்டார்மேன் கொடுத்த தகவலின் அடிப்படையில் படுகாயம் அடைந்த ராஜு உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரயில்வே போலீஸார் இது குறித்து நடத்திய விசாரணையில் ராஜுவிற்கு கடந்த பல மாதங்களாக வேலை இல்லை. இதனால் மகனை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திண்டாடிய ராஜு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு அவரின் மனைவியும் தனது கணவருடன் சண்டையிட்டுக்கொண்டு குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அதிலிருந்து தனது மகனுடன் ராஜு தனியாக வசித்து வந்தார். தற்போது நடந்துள்ள ரயில் விபத்து சம்பவம் குறித்து குஜராத்தில் உள்ள ராஜு மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மும்பை வந்துள்ளார். தற்போது ராஜு மயக்க நிலையில் இருக்கிறார். அவர் சுயநினைவுக்கு வந்த பிறகு வாக்குமூலம் பெற திட்டமிட்டு இருப்பதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
http://dlvr.it/SLGszr
Tuesday, 8 March 2022
Home »
» பிரிந்து சென்ற மனைவி; வேலையும் இல்லை! -நிதி நெருக்கடியால் 3 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை