ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக்டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்ய அரசு, போலி செய்திகளை வெளியிட்டால் 15ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்பையொன்றை வெளியிட்டுள்ள டிக்டாக் செயலி நிறுவனம், பெரும் சோகத்தையும் தனிமையையும் எதிர்கொள்ளக்கூடிய போரின்போது சிறு ஆறுதலாக தங்களது சேவை இருந்ததாகவும் ஆனால் ரஷ்ய அரசின் புதிய சட்டம் மூலம் அதனை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே ரஷ்யாவில் நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாகவும் அதேநேரத்தில் தகவல் பரிமாற்ற சேவை தொடரும் என்றும் டிக்டாக் நிறுவனம் கூறியுள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்துவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.இதையும் படிக்க: நேட்டோ அமைப்பு எப்படி உருவானது? அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர் சூழல் என்ன? - முழுமையான வரலாறு
http://dlvr.it/SLDcP1
Monday, 7 March 2022
Home »
» ரஷ்யாவில் டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் சேவைகள் நிறுத்தம்