உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றுடன் முடிவடைந்தன. பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கோவாவில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கிறது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைக் கைப்பற்றவில்லை.அகிலேஷ், யோகி
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட , அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி 111 இடங்களை வென்றது. இதையடுத்து அகிலேஷ் யாதவ், "எங்களின் இடங்களை இரண்டரை மடங்கும், வாக்கு வங்கியை ஒன்றரை சதவிகிதம் மேலும் உயர்த்தியதிற்கும் உத்தரப்பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. பா.ஜ.க-வின் இடங்களைக் குறைக்க முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இந்த குறைப்பு இன்னும் தொடரும். பொதுநல போராட்டம் வெல்லும்" என ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 37 வருடமாக எந்தக் கட்சியும் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியமைத்ததே இல்லை. ஆனால் முதல்முறையாக இந்த நிலையை உடைத்து பா.ஜ.க மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைத்திருக்கிறது.உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காரணம் யோகி ஆட்சியா... மோடி அலையா?
http://dlvr.it/SLTq2c
Friday, 11 March 2022
Home »
» ``பாஜக-வின் வெற்றியை குறைக்க முடியும் என்பதை காட்டியுள்ளோம்!" - தேர்தல் முடிவுகள் குறித்து அகிலேஷ்