வடமாநிலங்களில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக மும்பை, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கிறது. டெல்லியில் தற்போது 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது. இது 18-ம் தேதி வரை தொடரும் என்றும், அதன்பிறகு 19-ம் தேதிக்கு பிறகு தற்போதுள்ள வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தற்போது 39.7 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது. இது வழக்கத்தை விட 8 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும். மும்பை மற்றும் அதன் அருகில் உள்ள தானே, பால்கர், ராய்கட் போன்ற பகுதிகளில் அனல் காற்று அடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி 40.9 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கடந்த 1956-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி 41.7 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது.அனல் காற்று
குஜராத்தில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதோடு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சவுராஷ்டிரா பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் தென்மேற்கு பகுதியிலும் இந்த அனல் காற்று கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் 40 டிகிரிக்கும் அதிகமாக தற்போது வெப்பநிலை இருக்கிறது. இதனால் மக்கள் பகல் நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவையான அளவு தண்ணீர் குடிக்கும்படி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விற்பனைக்கு வந்த `புஷ்பா' சேலை; குஜராத் நபரின் டிரெண்டி ஐடியா!
http://dlvr.it/SLjtt0
Tuesday, 15 March 2022
Home »
» மும்பை, டெல்லி, குஜராத்தில் அனல் காற்று; எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!