20 வயதான இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீரர் நடப்பு ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவு ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் விக்டர் ஆக்சல்செனை (Viktor Axelsen) வீழ்த்தியுள்ளார். 21-13, 12-21, 22-20 என முதல் மற்றும் கடைசி செட்களில் வெற்றி பெற்றுள்ளார் லக்ஷயா சென்.
டென்மார்க் நாட்டை சேர்ந்த விக்டர் ஆக்சல்சென் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் ஐந்து முறை விளையாடியுள்ள லக்ஷயா சென் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் Kunlavut Vitidsarn-க்கு எதிராக பலப்பரீட்சை செய்கிறார். இன்று இந்த போட்டி நடைபெறுகிறது.
கடந்த 2021 டிசம்பரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் லக்ஷயா சென்.
http://dlvr.it/SLcBgx
Sunday, 13 March 2022
Home »
» ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய இந்தியாவின் லக்ஷயா சென்!