தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும், அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார் சாட்டை துரைமுருகன். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் அவரை விடுதலை செய்தது. இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த போது யூடியுப் சம்பந்தமான விபரங்களை சேகரித்து நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.
யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை. இந்த வழக்கில் உதவுவதற்காக நீதிமன்றம் நியமனம் செய்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் யூடியூப் குறித்து விபரங்களைப் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
http://dlvr.it/SLJm5M
Tuesday, 8 March 2022
Home »
» யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழிமுறைகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி