உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. லக்னோவில் பா.ஜ.க தொண்டர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக புல்டோசரில் வந்து தங்கள் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினர்.
லக்னோவைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஒருவர் தன் தலையில் பொம்மை புல்டோசரை வைத்துக்கொண்டு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``நாளை முதல் எதிரணிகள் மீது புல்டோசர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும்" எனக் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச அரசியல்
அதேபோல, யோகி ஆதித்யநாத் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில், ``மாஃபியாக்களுக்கும் குற்றவாளிகளுக்கும் சொந்தமான சொத்துகளின் மீது நமது புல்டோசர்கள் நடவடிக்கை எடுக்கும்" எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
அதைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது தேர்தல் உரையில், ``முதலமைச்சர் 'பாபா புல்டோசர்' இந்தத் தேர்தலில் தோல்வியடைவார்" என்று பிரசாரம் செய்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ``புல்டோசர் பேசாது. ஆனால், நன்றாக வேலை செய்யும். மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு புல்டோசர் சமூக விரோத சக்திகள் மற்றும் மாஃபியாக்களுக்கு எதிராக நகரும்" என யோகி ஆதித்யநாத் பேசினார்.பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ்
மேலும், தேர்தல் பிரசாரத்தில் அடிக்கடி புல்டோசர் என்று வார்த்தையை தொடர்ந்து குறிப்பிட்டு பேசிவந்தார். அதனால் யோகி ஆதித்யநாத்துடன் புல்டோசரும் சேர்த்துப் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில்தான், தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் அவரது முகநூல் பக்கத்தில், ``யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வர விரும்பாதவர்களுக்காக ஆயிரக்கணக்கான புல்டோசர்கள் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் வாங்கப்பட்டுள்ளன. ஜே.சி.பி-கள் மற்றும் புல்டோசர்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.பிரதமருடன் யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பாத துரோகிகள், உ.பி-யில் வாழ வேண்டுமானால் யோகி... யோகி என்று முழக்கமிட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இல்லை என்றால் உ.பி-யை விட்டு ஓட வேண்டி இருக்கும்" என்று பேசியிருந்தார்.
அதையடுத்து வாக்காளர்களை மிரட்டியதற்காகத் தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ 72 மணி நேரம் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.அமைச்சர் பியூஷ் கோயல்
உ.பி-யில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைபிடித்திருக்கும் நிலையில், ``அதிகாரம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மாநில மாஃபியாக்களின் சட்ட விரோத சொத்துகளை முடக்கவும், சட்டத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும், நிலச் சொத்துகளைப் பாதுகாக்கவும் புல்டோசர்கள் ஒரு கருவியாக மாறுகின்றன" என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை `புல்டோசர்' -ஆக பாவித்து இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ``கட்சித் தொண்டர்களின் உழைப்பின்றி இந்த மாநிலங்களில் வெற்றி கிடைத்திருக்காது. புல்டோசர் மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகளை வேரோடு பிடுங்குவதற்கான அடையாளமாக மாறியுள்ளது. உ.பி-யில் பிரதமர் மோடியின் கொள்கைகளை மேலும் செயல்படுத்துவோம்" எனத் தெரிவித்திருந்தார்.யோகி ஆதித்யநாத் ட்வீட்
மேலும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``இந்த வெற்றி நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு உள்ள பிரபலத்தைக் காட்டுகிறது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகியின் சமூக நலத்திட்டங்கள் நேர்மையாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவு இது.ட்ரென்டாகும் புல்டோசர் மீண்டும் வந்துவிட்டது ஹேஷ்டேக்
வளர்ச்சிக்கான புல்டோசர் உ.பி-யில் தொடர்ந்து செயல்படும். கோவா மற்றும் மணிப்பூரில் முன்பைவிட அதிக இடங்களைப் பெற்றுள்ளோம்" என புல்டோசரை உவமையாக வைத்தே அரசியல் பேசத் தொடங்கிவிட்டனர்.
அதேபோல, தேர்தல் ஹேஷ்டேக்குகளுடன் 'புல்டோசர் மீண்டும் வந்துவிட்டது' என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இருந்தது. ``யோகிக்கு வாக்களிக்காத துரோகிகளை...!" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு
http://dlvr.it/SLVGfs
Friday, 11 March 2022
Home »
» உ.பி: தேர்தல் களத்தில் `புல்டோசர் பாபா'வாக மாறிய யோகி ஆதித்யநாத்! - பின்னணி என்ன?