கர்நாடகாவில் தொடங்கி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஹிஜாப் விவகாரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ``ஹிஜாப் தடைக்கு எதிராகச் சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல. இதனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், AIMIM கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, தனியார் ஊடகமான NDTV-க்கு நேற்று பேட்டியளித்திருந்தார்.ஹிஜாப் விவகாரம்
அப்போது பேசிய அசாதுதீன் ஒவைசி, ``நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்தால், பன்மைத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை நம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளாக உள்ளன. அதில் ஒரே மாதிரியான தன்மை இல்லை. சமூக அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை உயர் நீதிமன்றம் இன்று பரிந்துரைத்துள்ளது. இது மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறும் அரசியலமைப்பின் 15-வது பிரிவை மீறுவதாகும். இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து பா.ஜ.க அரசாங்கம் ஊக்குவிக்கிறது" என கூறினார்.``ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குச் செல்லமாட்டோம்!" - நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் மேல்முறையீடு
http://dlvr.it/SLn1dX
Wednesday, 16 March 2022
Home »
» ``இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களை பாஜக அரசு ஊக்குவிக்கிறது" - அசாதுதீன் ஒவைசி காட்டம்