உத்தரப்பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க-வுக்கான வெற்றிவாய்ப்பு வெளிப்பட்டிருந்தது.உத்தரப்பிரதேச அரசியல்
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத் பவார், ``சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எந்த தவறும் செய்யவில்லை. அவர் சொந்தமாகப் போட்டியிட்டு நாட்டில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
எனவே, அவர் தேர்தல் முடிவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால் அவர் முன்பை விட சிறப்பாகப் போராடினார். மேலும், பஞ்சாப் மக்கள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸைத் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.யோகி, மோடி
ஏனென்றால் பஞ்சாப் விவசாயிகளின் இதயங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கோபம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க தேர்தலைச் சந்திக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உ.பி தேர்தல்: ``பாஜக பயப்படுகிறது; ஜனநாயகத்தைக் காப்பாற்ற கடைசி வாய்ப்பு!" - அகிலேஷ் யாதவ்
http://dlvr.it/SLRGbZ
Thursday, 10 March 2022
Home »
» ``அகிலேஷ் யாதவ் தேர்தல் முடிவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம்!" - சரத் பவார் ஆறுதல்