நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், பஞ்சாப்பை தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி முதல்முறையாக 92 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. இந்த 5 மாநிலத் தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியை வெளிப்படையாக ஆதரித்துவந்தார். ஆனால் தேர்தல் முடிவில், 255 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அகிலேஷின் சமாஜ்வாடி 111 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டமன்றத்தில் பா.ஜ.க-வை விமர்சித்துப் பேசினார்.யோகி ஆதித்யநாத்
அப்போது பேசிய மம்தா, ``ஆட்டம் இன்னும் முடியவில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும், நாடு முழுவதும் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இல்லாததால், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதென்பது பா.ஜ.க-வுக்கு எளிதானது அல்ல. எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் (பா.ஜ.க) கடக்க மாட்டீர்கள். உத்தரப்பிரதேசத்தில் சமஜ்வாடி தோற்றிருந்தாலும் கூட, கடந்த முறையை விடவும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை இந்த முறை சமாஜ்வாடி வைத்துள்ளது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது" எனப் பேசினார்.மம்தா பானர்ஜி
மேலும் பெகாஸஸ் பற்றி பேசிய மம்தா, ``என்னுடைய தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுகிறது. எதையாவது பேசினால் தெரிந்துவிடும். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கும் பெகாசஸ் வாங்க ஆஃபர் வந்தது. ஆனால் நான் அதை வாங்கவில்லை. அந்தரங்கத்தில் தலையிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பல பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பெகாசஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளன" என்று கூறினார்."காங்கிரஸ் விரும்பினால் 2024 -ல் இணைந்து தேர்தலை சந்திக்கலாம்!" - மம்தா பானர்ஜி
http://dlvr.it/SLs0FN
Thursday, 17 March 2022
Home »
» ``ஆட்டம் இன்னும் முடியவில்லை, எங்கள் ஆதரவில்லாமல்..!" - பாஜக-வைச் சாடிய மம்தா