உத்தரப்பிரதேசத் தேர்தல்:
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதிக சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி அதிக மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மாநிலம் என்பதால் இந்த மாநிலத் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒன்பது இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது.உத்தரப்பிரதேச அரசியல்
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 376 இடங்களிலும், நிசாத் கட்சி 15 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 12 இடங்களிலும் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்தக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யாநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்களிலும் தனித்துத் தேர்தலைச் சந்திக்கிறது. சமாஜ்வாடி கட்சிக் கூட்டணியில், சமாஜ்வாடி உட்பட மொத்தம் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண்கிறது. இடதுசாரிகள் தொடங்கி, ஆம் ஆத்மி கட்சி வரை பலரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
கருத்துக்கணிப்பு முடிவுகள்:
இன்று உத்தரப்பிரதேசத்தின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு- பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த முடிவுகள் பின்வருமாறு...Republic Exit polls
ரிபப்ளிக் செய்தி நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
உத்தரப்பிரதேசம் மொத்த இடங்கள் - 403
பாஜக கூட்டணி - 262 முதல் 277
சமாஜ்வாடி கூட்டணி - 119 முதல்134
பகுஜன் சமாஜ் - 7 முதல் 15
காங்கிரஸ் - 3 முதல் 8
மற்றவர்கள் - 1 முதல் 3 exit polls
என்.டி.டி.வி எக்ஸிட் போல்ஸ்:-
பா.ஜ.க கூட்டணி - 240 இடங்கள்
சமாஜ்வாடி கூட்டணி - 143 இடங்கள்
பகுஜன் சமாஜ் - 14 இடங்கள்
காங்கிரஸ் - 5 இடங்கள்
நியூஸ் எக்ஸ்:-
பா.ஜ.க கூட்டணி - 211 முதல் 225 இடங்கள்
சமாஜ்வாடி கூட்டணி - 146 முதல் 160 இடங்கள்
பகுஜன் சமாஜ் - 14 முதல் 24 இடங்கள்
காங்கிரஸ் - 4 முதல் 6 இடங்கள்
டைம்ஸ் நவ்:
பா.ஜ.க கூட்டணி - 225 இடங்கள்
சமாஜ்வாடி கூட்டணி - 151 இடங்கள்
பகுஜன் சமாஜ் - 14 இடங்கள்
காங்கிரஸ் - 9 இடங்கள்
மற்றவர்கள் - 4 இடங்கள்UP India Today Exit Poll
இந்தியா டுடே:
பா.ஜ.க கூட்டணி - 288 முதல் 326 இடங்கள்
சமாஜ்வாடி கூட்டணி - 71 முதல் 101 இடங்கள்
பகுஜன் சமாஜ் - 3 முதல் 9 இடங்கள்
காங்கிரஸ் - 2 முதல் 3 இடங்கள்
வீட்டோ:
பா.ஜ.க கூட்டணி - 225 இடங்கள்
சமாஜ்வாடி கூட்டணி - 151 இடங்கள்
பகுஜன் சமாஜ் - 14 இடங்கள்
காங்கிரஸ் - 9 இடங்கள்
மற்றவர்கள் - 4 இடங்கள்
http://dlvr.it/SLF9cD
Monday, 7 March 2022
Home »
» Exit Polls: உ.பி-யில் முந்தும் பாஜக; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!