இன்றைய டிஜிட்டல் உலக மக்கள் அனைவரும் NFT (Non Fungible Token) குறித்து அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் NFT விற்பனையை தொடங்க மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இனி இன்ஸ்டா பயனர்களும் அந்த தளத்தில் ஊடாக NFT-களை மின்ட் செய்யலாம் என தெரிகிறது. இதனை மார்க் ஜுக்கர்பெர்க் தனது அண்மைய உரையாடலில் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் இது குறித்த பேச்சு எழுந்திருந்தது. இருந்தாலும் இதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகவும். அது கூடிய விரைவில் தங்கள் தளத்தில் அனைவருக்கும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ட்விட்டர் நிறுவனம் தங்கள் தளத்தில் சில பயனர்கள் மட்டும் அவர்களிடம் உள்ள NFT-யை புரொஃபைல் படமாக வைத்துக் கொள்ளும் அம்சத்தை வழங்கி இருந்தது.
NFT?
நம்மிடம் உள்ள போட்டோ, ஓவியங்கள் என பல்வேறு விதமான கலை படைப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் தனித்துவமாக பதிவு செய்வது தான் NFT. கிட்டத்தட்ட இது ஒரு காப்புரிமை போல. உதாரணமாக மோனோலிசா படத்தை ஓவியர் டாவின்சி வரைந்தார் என்பதை உலகமே அறியும். இருந்தாலும் அந்த படம் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் அழகுக்காக தொங்கவிடப்பட்டிருக்கும். அது பலரது கைகளில் இருந்தாலும் அந்த படத்தை வரைந்தவர் டாவின்சி. அது போல தான் NFT-யும். ஆனால் இது அப்படியே டிஜிட்டல் வடிவில் இருக்கும் அவ்வளவு தான். அதை படைத்தவர் தனக்கு தேவைப்படும் நேரத்தில் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்யலாம். அப்படி செய்து விட்டால் அந்த படைப்பின் உரிமை அதை வாங்கியவருக்கு சென்றுவிடும்.
http://dlvr.it/SLp3Tp
Wednesday, 16 March 2022
Home »
» இன்ஸ்டாகிராமில் NFT விற்பனையை விரைவில் தொடங்க மார்க் ஜுக்கர்பெர்க் திட்டம்!