ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, எதிர்திசையில் வந்த கொல்கத்தா செல்லும் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``உயிரிழந்த 7 பேரும் செகந்திராபாத் - கவுஹாத்தி அதிவிரைவு ரயில் பயணிகள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக படுவ கிராமம் அருகே ரயில் நின்றபோது, இந்த 7 பேரும் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த கொல்கத்தா செல்லும் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள் மோதியதில் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்" என்று தெரிவித்துள்ளனர்.ஜெகன் மோகன் ரெட்டி
இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மும்பை: ரயில் முன் பாய்ந்த தந்தை; 6 வயது மகன் உயிர் தப்பியது எப்படி?!
http://dlvr.it/SNQ6zy
Tuesday, 12 April 2022
Home »
» தொழில்நுட்ப கோளாறு; தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் - 7 பேர் பரிதாப பலி