உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டாவில் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் உள்ளது. பிரபல சாமியாரான இவர், 2013-ல் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கின் விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தற்போது ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அச்சுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பே அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒரு காவலர் திரும்பப் பெறப்பட்டார்.ஆசாராம் பாபு
ஒரு காவலர் பாதுகாப்பிலிருந்தபோதே கடந்த மார்ச் 21-ம் தேதி ஆசாராம் பாபுவின் ஆதரவாளர் ஒருவர் கடிதத்தை வீட்டினுள் எறிந்துவிட்டுச் சென்றதாக கூறப்பட்டது. அந்தக் கடிதத்தில் கொலை மிரட்டல், ஆபாசமான வார்த்தைகள் இருந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மீண்டும் அந்தச் சிறுமியின் குடும்பத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷாஜஹான்பூரின் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் நேற்று தனியார் செய்தி நிறுவனத்திடம், "ஆசாராம் பாபுவால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்குக் கொலை மிரட்டல தொடர்வதால் தற்போது காவல் நடவடிக்கையைப் பலப்படுத்தியுள்ளோம்.காவல்துறை
முன்பு, இரண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். தேர்தலின்போது, ஒரு காவலர் வாபஸ் பெறப்பட்டார். பாதுகாப்பை பலப்படுத்தி, தற்போது மொத்தம் மூன்று காவலர்களை நியமித்துள்ளோம்.
பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குச் செல்லும் நபர்களை உன்னிப்பாக கண்காணிக்கவும், அவர்களின் விவரங்களைக் குறித்துக்கொள்ளவும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.ஆசாராம் பாபு ஆசிரமத்துக்கு வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலம்; காவல்துறை தீவிர விசாரணை!
http://dlvr.it/SNYdqw
Thursday, 14 April 2022
Home »
» பாலியல் வன்கொடுமை வழக்கு - ஆசாராம் பாபு ஆதரவாளர்களால் சிறுமி குடும்பத்துக்குத் தொடரும் கொலை மிரட்டல்