இளையராஜா இசையோடு சேர்த்து போக்குவரத்து விழிப்புணர்வு அறிவிப்பை ஒலி பெருக்கி மூலம் ஏற்படுத்தி வருகிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.
போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பதாகைகள் வைப்பது, ஓவியங்கள் வரைந்து ஏற்படுத்துதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், மைக் மூலம் பேசுதல், குறும்படங்கள் என பல வகைகளில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன், ஒரு கட்டமாக இளையராஜா இசையோடு சேர்த்து போக்குவரத்து விழிப்புணர்வை உண்டாக்குகின்றனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் சிக்னலில் பெரியமேடு போக்குவரத்து போலீசார் ஒலி பெருக்கி மூலம் போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிக்கும்படி பேசி வருகின்றனர்.
அந்த அறிவிப்போடு, இளையயராஜாவின் இசையையும் சேர்த்து சொல்வது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பீக் அவர்ஸில் காலை, மாலை இருவேளைகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இசையை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து விழிப்புணர்வையும் கேட்டு போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
http://dlvr.it/SN8wsF
Thursday, 7 April 2022
Home »
» இளையராஜா இசையோடு போக்குவரத்து விழிப்புணர்வு: கவனம் ஈர்க்கும் சென்னை டிராபிக் போலீஸ்