மும்பையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில நாள்களுக்கு முன்பு தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சலீம் புரூட் கைது செய்யப்பட்டார். இந்த ரெய்டை தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா சகீலுக்கு மிகவும் நெருங்கிய கூட்டாளியான ஆரிப் அபுபக்கர் ஷேக், சபீர் அபுபக்கர் ஷேக் ஆகிய இரண்டு பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைது செய்துள்ளது. தாவூத் இப்ராஹிம்
அவர்கள் இரண்டு பேரிடமும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த ரெய்டை தொடர்ந்து நாட்டின் முக்கிய இடங்களில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்திருந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சோட்டாசகீல் பாகிஸ்தானிலிருந்துகொண்டு மும்பையில் மிரட்டிப் பணம் பறித்தல், ஹவாலா பண பரிவர்த்தனை, போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறான். கைது
அவனைக் கைது செய்ய இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமும், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனைப்பற்றி தகவல் கொடுத்தால் 25 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தாவூத் இப்ராஹிம், அவனது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு மும்பையில் ரெய்டு நடத்தி தாவூத் இப்ராஹிம் சகோதரியின் மகன் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி... சிவசேனா தலைவர்களைக் கொலைசெய்ய தாவூத் இப்ராஹிம் தனிப்படை?!
http://dlvr.it/SQHRdJ
Friday, 13 May 2022
Home »
» மும்பை: தாவூத் இப்ராஹிமின் நெருங்கியக் கூட்டாளிகள் இருவர் கைது!