கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மஹாதேஷ் என்பவரை காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது பெண் வழக்கறிஞரான சங்கீதா மஹாதேஷ் இருக்கும் வீட்டுக்கு வழி காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஹாதேஷ், சங்கீதா தனது வீட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார்.
#UttarPradesh's #GundaRaj shifted to the #Karnataka's #Bagalakot.
The attack on Lawyer #SangeethaShikkeri, just because she showed the house to the police.
Dear CM @BSBommai, HM @JnanendraAraga Sir, What’s happening in Karnataka?#BJPFailsIndia pic.twitter.com/CFFq2KA1nx— Hate Detector (@HateDetectors) May 14, 2022
இதனால் படுகாயம் அடைந்த சங்கீதாவைப் பொதுமக்கள் மீட்டு பாகல் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மஹாதேஷை கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
கர்நாடகா: ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து பள்ளியில் எழுந்த பைபிள் சர்ச்சை... இந்து அமைப்பு புகார்
http://dlvr.it/SQRsCH
Monday, 16 May 2022
Home »
» கர்நாடகா: போலிஸாருக்கு வழிகாட்டியதால் தாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் - அதிர்ச்சி வீடியோ