தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்தி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் சரத்பவார் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த மராத்தி நடிகையான கேதகி சிதலே என்பவர், அவரது பவார் என்ற பெயரையும், அவரது வயதையும் குறிப்பிட்டு, அவரது உடல்நல பிரச்னைகளை குறிக்கும் வகையிலும் மராத்தியில் கவிதையை வெளியிட்டு இருந்திருக்கிறார். மேலும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்திற்கு எதிராக அந்நடிகை கருத்து பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.
இதையும் படிங்க... “பாஜகவில் இணைந்தால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகலாம்”- உத்தவ் தாக்கரே பேச்சு
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் தூண்டுதலின் பேரில் நடிகை கேதகி சிதலே இவ்வாறு விமர்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த மராத்தி நடிகையை கைது செய்துள்ளனர்.
http://dlvr.it/SQPxhv
Sunday, 15 May 2022
Home »
» சரத்பவாரை தரக்குறைவாக விமர்சித்த புகாரில் மராத்தி நடிகை கைது