ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், போக்குவரத்துத்துறை துறை சார்பாக இணை ஆணையர் இன்று அதுதொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், `ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். போக்குவரத்து ஆணையர் தலைமையில் அந்த ஆலோசனை நடைபெறும். தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆணையம் ஆலோசனை நடத்தவிருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக `பத்து ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தற்போதைய எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவின் அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும்’ என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் என கோரிக்கை விடுத்திருந்தனரும்கூட.
சமீபத்திய செய்தி: "பள்ளிக்கு அருகில் மதுபான கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது" - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
http://dlvr.it/SQ9qXm
Wednesday, 11 May 2022
Home »
» `ஆட்டோ கட்டண நிர்ணய விவகாரம்... விரைவில் ஆலோசனை!’- போக்குவரத்துத்துறை அறிவிப்பு