மக்களை மேலும் ஒரு மொழி கற்றுக்கொள்ள திணிப்பது எப்படி நியாயமாகும்? என இந்தி குறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வினவியுள்ளார். பத்ம விருதுகளை மேற்கோள் காட்டி இந்தி திணிப்பு குறித்து அவர் விவரித்துள்ளார்.ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மொழி திணிப்பு குறித்து சாலமன் பாப்பையா கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டதாகவும், தாய்மொழியை கற்றுக் கொள்வதோடு ஆங்கிலத்தையும் கற்க வேண்டியிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு மொழியை கற்க சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு 25 கோடி ரூபாயும், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 600 கோடி ரூபாயும் ஒதுக்கியதை மக்கள் கவனித்து வருவதாகவும், தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல பிற மாநில மக்களும், அவர்களது மொழி நடத்தப்படும் விதத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை சுட்டிக்காட்டி பேசியுள்ள சாலமன் பாப்பையா, பத்ம விருதில் ஒரு வரி கூட தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை என்றும், அனைத்தும் இந்தியிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அதில் தன்னை விமர்சித்து இருந்தால் கூட தமக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாநிலங்களில் வேலைவாய்ப்புக்காக மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதில் தவறில்லை என முன்பு சாலமன் பாப்பைய்யா கருத்து தெரிவித்திருந்தார்.இதையும் படிக்கலாம்: மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
http://dlvr.it/SQPxgv
Sunday, 15 May 2022
Home »
» 'மொழித் திணிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்' - சாலமன் பாப்பையா
'மொழித் திணிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்' - சாலமன் பாப்பையா
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!