மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி திமுக சார்பில் தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க... அசாமில் தொடரும் கனமழை: உயிரிழப்புகளால் திணறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
திமுக கூட்டணி சார்பில் ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவாவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
http://dlvr.it/SQPZZp
Sunday, 15 May 2022
Home »
» மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு