மீண்டும் டெல்லி அணியின் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி அணியில் மீண்டும் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை அணியுடன் டெல்லி அணி மோத இருந்த நிலையில், கொரோனா மீண்டும் தலைதூக்கியதையடுத்து, போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அணியுடனான போட்டி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு டெல்லி கேபிட்டல்ஸ் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. IPL 2022 சீசனில் டெல்லி அணி தனிமைப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
சீசனின் தொடக்கத்தில், பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கீப்பர்-பேட்டர் டிம் சீஃபர்ட் மற்றும் பிளேயிங் லெவனில் பங்கேற்காத மூன்று உறுப்பினர்கள் உட்பட அணியின் ஆறு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SPzHCM
Sunday, 8 May 2022
Home »
» டெல்லி அணியில் மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா? சென்னையுடனான போட்டி நடைபெறுமா?