கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி, கோலிவுட்டுக்கு வந்து அப்படியே டோலிவுட்டின் முன்னணி நாயகியாக உருவெடுத்திருக்கிறார் சாய் பல்லவி. நடனத்திறமையால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நடிகை சாய்பல்லவி கவர்ச்சியான ஆடைகள் அணிந்து நடிப்பது தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
அதற்கு காரணம் என்ன என அவரே அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் சாய்பல்லவி கூறியிருக்கிறார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
“என்னுடைய குடும்பம் பாரம்பரியமானது, எனக்கு தங்கை இருக்கிறார். அவரும் நானும் பேட்மிண்டன், டென்னிஸ் விளையாடும் போதெல்லாம் எங்களுக்கு விருப்பமான ஆடையையே உடுத்துவோம். ஆனால் சினிமாவுக்குள் வந்ததும் ஒரு சம்பவம் அப்படியான ஸ்கின்னி உடைகளை அணிய வேண்டாம் என முடிவெடுக்கச் செய்தது.
என்னுடைய படிப்புக்காக ஜார்ஜியாவில் இருந்தபோது அங்கு டேங்கோ நடனம் ஆட கற்றுக்கொண்டேன். அப்போது அந்த நடனம் ஆடுவதற்கென ஸ்கின்னி ட்ரெஸ் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது என் பெற்றோரிடம் அனுமதி பெற்று அந்த நடனத்தை கற்றேன். அதில் மிகவும் வசதியாகவே உணர்ந்தேன்.
ஆனால் பிரேமம் படம் வெளியான பிறகு என்னுடைய டேங்கோ டான்ஸ் வீடியோ வைரலானது. அதற்கு நெட்டிசன்களால் கொடுக்கப்பட்ட கமெண்ட்ஸ் என்னை மிகவும் வேதனையடையச் செய்தது. அதனால்தான் திரைப்படங்களில் கவர்ச்சியான ஆடைகள் அணிவதில்லை என்ற முடிவை எடுத்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
சாய் பல்லவி ராணா டகுபதி இணைந்து நடித்திருக்கும் 'விரத பர்வம்' என்ற படம் வருகிற 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விரத பர்வம் படத்தின் நிகழ்ச்சியின் போது சாய் பல்லவியுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். அப்போது நடிகர் ராணா சாய் பல்லவிக்கு பவுன்சராக இருந்து பாதுகாத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
http://dlvr.it/SSCzGC
Wednesday, 15 June 2022
Home »
» ’கவர்ச்சியாக நடிப்பதை தவிர்ப்பது ஏன்?’ - ரகசியம் உடைத்த சாய் பல்லவி!