ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செல்போன் திருடியதாகக் கூறி, சந்தேகத்தின் அடிப்படையில் சூரி பாபு என்பவர் தாரகேஸ்வர ராவ் என்ற இளைஞரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கினார். இந்தச் சம்பவம் சுமார் பத்து நாள்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. ஆனால் தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், ஒரு நபர் மற்றொருவரை செருப்பை பயன்படுத்தி தாக்குவதும், அவரை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதும் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாரகேஸ்வர ராவ் உள்ளூர் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, தாக்குதல் நடத்திய சூரி பாபுவை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளின் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தப் பகுதி காவல்துறை உயரதிகாரிகள், ``செல்போன் காணாமல் போனது தொடர்பாக தாரகேஸ்வர ராவுக்கும், சூரி பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. தாரகேஸ்வர ராவ் தனது போனை திருடி விட்டதாக சூரி பாபு குற்றம்சாட்டினார். இதன் காரணமாக தாரகேஸ்வர ராவ் தாக்கப்பட்டிருக்கிறார். அவரை நாங்கள் கைதுசெய்து விட்டோம். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது'' என்றனர். `பதவி போனால் என்ன; விவசாயம் இருக்கு' பதவிநீக்கம் செய்யப்பட்ட ஆந்திர துணை முதல்வரின் இயற்கை விவசாயம்
http://dlvr.it/SRy03C
Friday, 10 June 2022
Home »
» ஆந்திரா: செல்போன் திருடியதாக சந்தேகம்... பட்டியலின இளைஞரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய நபர்!