நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் சில நபர்களைக் கைதுசெய்தனர். பிரயாக்ராஜில் ஏற்பட்ட வன்முறைக்கு முக்கியக் காரணமாக கருதப்படுபவர் ஜாவேத் முகமது. அதனால் அவரின் வீடு இடிக்கப்பட்டது. `ஜாவேத் முகமது வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெறவில்லை... அதனால் அவரின் வீட்டை இடித்துவிட்டோம்' என அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.யோகி ஆதித்யநாத்
இந்த நிலையில், குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி, ``உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிவிட்டார். அவர் யாரையும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பார்... இடிக்கப்பட்ட வீடு, குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி பெயரில் இருக்கிறது. அரசு திட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது'' என்று அரசை சாடினார்`மோடி குறித்து விமர்சனம்!’ - ஓவைசி, திருமுருகன் காந்தி உட்பட 17 பேர் மீது வழக்கு
http://dlvr.it/SS6DLY
Monday, 13 June 2022
Home »
» ``யோகி ஆதித்யநாத் தலைமை நீதிபதியாகிவிட்டார்; யாரையும் குற்றவாளியாக்குவார்!" - ஒவைசி