இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச்சூடு என்பது மாநிலத்தை எப்போதும் பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. இதில், பொதுமக்களும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகின்றனர். அண்மையில் கூட தொடர்ச்சியாக வங்கி ஊழியர், பள்ளி ஆசிரியை, டிவி நடிகை எனப் பலர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில், எஸ்.ஐ ஒருவர், பணியில் இல்லாத நேரத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீர்
இந்திய ரிசர்வ் போலீஸ் படையில் எஸ்.ஐ-ஆக உள்ள ஃபரூக் அஹ் அமீர், பாம்பூர் பகுதி சம்பூராவில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள வயலில், இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சப்-இன்ஸ்பெக்டர் ஃபரூக் அஹ் அமீரின் உடல், அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள நெல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், நேற்று மாலை தனது வயல் வேலைகளுக்காக, வீட்டிலிருந்த புறப்பட்ட அமீர், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்" எனத் தெரிவித்திருந்தது. மேலும் அமீர், தீவிரவாதிகளால் அவரின் வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பலரால் சந்தேகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜம்மு காஷ்மீர்: நடப்பாண்டில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!
http://dlvr.it/SSPlHY
Saturday, 18 June 2022
Home »
» காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு... போலீஸ் எஸ்.ஐ தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை