கூகுள் ட்ரைவில் தகவல்களை சேமிக்க ஊழியர்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணி சார்ந்த தகவல்களை சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஆவணங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் கூகுள் ட்ரைவ், விபிஎன் மற்றும் ட்ராப்பாக்ஸ் ஆகியவற்றில் அரசின் பாதுகாப்பு அம்சங்கள், ரகசியங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தவும் அதில் தகவல்களை சேமிக்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க... மதுரையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் அனுமதியுடன் இயங்குகிறதா? நீதிமன்றம் கேள்வி
இந்திய கம்ப்யூட்டர் ஏஜென்சிஸ் ரெஸ்பான்ஸ் குழு மற்றும் தேசிய புள்ளியல் மையமும் இணைந்து செய்த பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்களை அவற்றில் சேமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SSQSsP
Saturday, 18 June 2022
Home »
» கூகுள் ட்ரைவில் தகவல்கள் சேமிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு தடை